அல்லாஹ் உன்னைப் போற்றிப் புகழ்த்திடுவோம்
அண்ணல் நபி மேல் ஸலவாத்துரைப்போம்
நம்மடவளை மதீனா தேசிய கல்லூரி
நல்லறிவகமாய் ஒளி தர அருள்வாய்
பல்கலையும் பயின்று பண்பாடடைவோம்
பார்புகளும் இஸ்லாமிய வழி நடப்போம்
நல்லொழுக்கமும் நேர்மையும் காத்திடுவோம்
நம் கலையகம் தரும் பயிற்சியில் உயர்வோம்
விஞ்சானம் விளையாட்டிலும் தேர்ந்திடுவோம்
வெல்லும் கட்டுப்பாட்டினை பேணிடுவோம்
அஞ்ஞான இருள்களையும் மறையாம்
அல்குர்ஆனை ஓதி உணர்த்திடுவோம்
சிங்களம் தமிழ் முஸ்லிம் எனும் இணைப்பில்
சிந்தை மலர் சமய ஒற்று உணர்வில்
பேர்மேவும் பணிக்கமை அர்ப்பணிக்கும்
பேரூக்கம் தரும் நம் கலையகமாம்
அறிவூட்டும் நல்லாசிரியரை மதிப்போம்
அன்னை தந்தை அன்பினையே துதிப்போம்
நிறைவூட்டும் தாய் நாட்டு புகழ் இசைப்போம்
நெஞ்சம் மகிழ் எதிர்காலம் தனைப்பெறுவோம்
நம்மடவளை மதீனா தேசிய கல்லூரி
நல்லறிவகமாய் ஒளி தர அருள்வாய்.